இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இப்போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக நிதீஷ் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோருக்கு பதிலாக ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர்(கே), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட்
இந்தியா பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ்(கே), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரெல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி