இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (பிப்ரவரி 01) மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டு முகமது ஷமி பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
அதேசமயம் இங்கிலாந்து அணியில் சாகிப் மஹ்முத்திற்கு பதிலாக மார்க் வுட் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார். இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்திய பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ரிங்கு சிங், ஷிவம் துபே, ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க் வுட்.