இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - புஜாரா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதில் சுப்மன் கில் அரைசதம் கடந்தார். உணவு இடைவேளைக்குப் பின் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் 52 ரன்னிலும், புஜாரா 26 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் அஜிங்கியா ரஹானே - அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 35 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.