இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே நடைபெற்ற முதலிரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு இஷான் கிஷான், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் டிம் சௌதிக்கு ஓய்வளிக்கப்பட்டு, மிட்செல் சாண்ட்னர் கோப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.
நியூசிலாந்து - மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டிம் சைஃபர்ட், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, லோக்கி ஃபெர்குசன், இஷ் சோதி, ட்ரெண்ட் போல்ட்.