இந்தியாவின் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு அணியும், முன்னாள் சாம்பியன் கர்நாடகா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தமிழ்நாடு அணி முதல் கர்நாடக அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய இறுதிப்போட்டியில் கர்நாடக அணி தமிழக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. அப்போது ஏற்பட்ட தோல்விக்கு தமிழக அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகா: ரோஹன் கதம், மனீஷ் பாண்டே(கே), அபினவ் மனோகர், கருண் நாயர், ஷரத் பிஆர், பிரவீன் துபே, ஜகதீஷா சுசித், தர்ஷன் எம்பி, பிரதீக் ஜெயின், கேசி கரியப்பா, வித்யாதர் பாட்டீல்.
தமிழ்நாடு : ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், சாய் சுதர்சன், விஜய் சங்கர்(கே), சஞ்சய் யாதவ், ஷாருக் கான், எம் முகமது, முருகன் அஸ்வின், சாய் கிஷோர், சந்தீப் வாரியர், டி நடராஜன்.