இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருப்பதால் 1-1 என சமனில் உள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடக்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சஹாலுக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்தியா: ஷுப்மான் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கே), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.
நியூசிலாந்து: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர்(கே), இஷ் சோதி, லாக்கி பெர்குசன், பென் லிஸ்டர், பிளேயர் டிக்னர்.