இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளன.
தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக இப்போட்டி தொடங்குவது தற்போது தாமதமானது.
இந்நிலையில் தற்போது இப்போட்டி மீண்டும் தொடங்கியுள்ளது. இப்போடியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ஜன்னெமன் மலான், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர்(கே), மார்கோ ஜான்சன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே.
இந்தியா: ஷிகர் தவான்(கே), ஷுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவேஷ் கான்.