மழை எதிரொலி: போட்டி நடப்பதில் தாமதம்!

IND vs SA, 3rd T20I: The toss has been delayed due to a wet outfield
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளன.
தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக இப்போட்டி தொடங்குவது தற்போது தாமதமாகியுள்ளது.
அதன்படி 1 மணிக்கு டாஸ் போடப்படுவதாக இருந்த நிலையில், தற்போது மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டி குறித்த அடுத்த அறிவிப்பு 1.30 மணிக்கு வெளியாகும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
இதனால் இன்றைய போட்டியிலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் நடத்தப்படும் என கூறப்படுகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News