இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் உள்ளூர் போட்டிகளில் கலக்கிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கும், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்தியா: இஷான் கிஷன், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா(கே), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஹர்ஷல் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை: பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க.