நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்றாலும், பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆகிய 2 அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பொறுத்தமட்டில் இது முக்கியமான தொடர் அல்ல. அதன்படி நடைபெற்ற முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கராச்சியில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ஹசன் அலி மீண்டும் அணிக்குள் இடம்பிடித்துள்ளார்.
நியூசிலாந்து: டாம் லாதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் பிளெண்டல், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி, டிம் சௌதீ(கே), மேட் ஹென்றி, அஜாஸ் படேல்.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷஃபீக், இமாம்-உல்-ஹக், ஷான் மசூத், பாபர் அசாம்(கே), சௌத் ஷகீல், சர்ஃப்ராஸ் அகமது, ஆகா சல்மான், ஹசன் அலி, நசீம் ஷா, மிர் ஹம்சா, அப்ரார் அகமது