தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா தனது 3ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்தை இன்று எதிர்கொள்கிறது.
அதன்படி செயிண்ட ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்துவீச தீர்மானித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா 2 விக்கெட்டுகளைப் பெற்று புள்ளிப்பட்டியளின் முதலிரு இடங்களில் உள்ளன. இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து மகளிர்: சோபியா டன்ங்லி, டேனியல் வியாட், ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கைவர், ஹீதர் நைட்(கே), எமி ஜோன்ஸ், கேத்ரீன் ஸ்கைவர் ப்ரண்ட், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், சாரா க்ளென், லாரன் பெல்
இந்திய மகளிர்: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ரிச்சா கோஷ், ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங்.