நடு முழுவதும் கரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இளைஞர்கள் முதல் முதியவர்கள் அவரை ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான நடராஜன் தங்கராசு இன்று கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார். மேலும், அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
Am so grateful to get my #Vaccine this morning. A million thanks to our incredible health care workers who have put themselves at risk for our people . #LetsGetVaccinated #Jabbed pic.twitter.com/v21Ez3dJGV
— Natarajan (@Natarajan_91) May 27, 2021
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடராஜன், “இன்று காலை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்கு தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அயராது உழைத்து வரும் முன்கள பணியாளர்களுக்கு நன்றிகள். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.