
இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடrரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று செஸ்ட்ர் லீ ஸ்டீரிட்டில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து ஆணியை பாந்துவீச அழைத்துள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்த உத்வேகாத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனல் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: டாமி பியூமண்ட், ஏமி ஜோன்ஸ், எம்மா லாம்ப், நாட் ஸ்கைவர்-பிரண்ட்(கேப்டன்), சோஃபியா டங்க்லி, ஆலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ், சார்லோட் டீன், சோஃபி எக்லெஸ்டோன், லின்சி ஸ்மித், லாரன் ஃபைலர், லாரன் பெல்
இந்திய பிளேயிங் லெவன்: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர்(கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, ராதா யாதவ், ஸ்னே ராணா, ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட்.