ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்ததுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. நவி மும்பையிலுள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்டதுள்ளது. ஏற்கெனவே ஒருநாள் தொடரை முழுவதுமாக இழந்துள்ள இந்திய அணி அதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மகளிர்: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா தாக்கூர் சிங், டிடாஸ் சாது
ஆஸ்திரேலிய மகளிர்: அலிசா ஹீலி(கே), பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், எல்லிஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், கிரேஸ் ஹாரிஸ், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், மேகன் ஷட், டார்சி பிரவுன்.