இந்திய மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 10) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீராங்கனை சயாலி சத்காரே பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் வெற்றிகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி இத்தொடரை எதிர்கொள்கிறது.
மேலும் இந்த அணியில் வழக்கமான கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக ஸ்மிருதி மந்தனா அணியை தலைமை தாங்குகிறார். இதனால் அவரது தலைமையில் இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. மறுபக்கம் அயர்லாந்து மகளீர் அணியும் சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்திய மகளிர் பிளேயிங் லெவன்: ஸ்மிருதி மந்தனா(கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தேஜல் ஹசாப்னிஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, சயாலி சத்காரே, சைமா தாக்கூர், பிரியா மிஸ்ரா, டைட்டாஸ் சாது.
அயர்லாந்து மகளிர் பிளேயிங் லெவன்: சாரா ஃபோர்ப்ஸ், கேபி லூயிஸ்(கேப்டன்), உனா ரேமண்ட்-ஹோய், ஓர்லா பிரெண்டர்காஸ்ட், லாரா டெலானி, லியா பால், கூல்டர் ரெய்லி, ஆர்லீன் கெல்லி, ஜார்ஜினா டெம்ப்சே, ஃப்ரேயா சார்ஜென்ட், ஏமி மகுவெர்.