அயர்லாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று (ஜனவரி 15) நடைபெறவுள்ளது. ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அயர்லாந்து மகளிர் அணியை பந்துவீச அழைத்துள்ளது.
இதில் ஏற்கெனவே இந்திய அணி முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்று அசத்திய நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேசமயம், அயர்லாந்து அணி இப்போட்டியை வென்று ஆறுதல் வெற்றியைத் தேட முயற்சிக்கும். இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா(கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி சர்மா, சயாலி சத்காரே, மின்னு மணி, தனுஜா கன்வர், டைட்டாஸ் சாது.
அயர்லாந்து மகளிர் அணி: சாரா ஃபோர்ப்ஸ், கேபி லூயிஸ்(கேப்டன்), கூல்டர் ரெய்லி, ஓர்லா பிரெண்டர்காஸ்ட், லாரா டெலானி, லியா பால், ஆர்லீன் கெல்லி, ஏவா கேனிங், ஜார்ஜினா டெம்ப்சே, ஃப்ரேயா சார்ஜென்ட், அலனா டால்செல்.