இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தையும், மறுபக்கம் அதிரடி காட்டிய ஷஃபாலி வர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 292 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். அதன்பின் 149 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷுபா சதீஷும் 15 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் தொடர்ந்து அதிரடி காட்டிய ஷஃபாலி வர்மா தனது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
runs
— BCCI Women (@BCCIWomen) June 28, 2024
deliveries
fours
sixes
WHAT. A. KNOCK
Well played @TheShafaliVerma!
Follow the match https://t.co/4EU1Kp6YTG#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/UTreiCRie6
இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஷஃபாலி வர்மா பெற்றுள்ளதுடன், அதிவேகமாக இரட்டை சதமடித்த முதல் வீராங்கனை எனும் சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார். பின்னர் இப்போட்டியில் 23 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 205 ரன்களை விளாசிய நிலையில் ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.