ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் கேகேஆர் அணி வெற்றிபெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
மேலும் இப்போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் டிம் சௌதிக்கு பதிலாக லோக்கி ஃபர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ராஜஸ்தான் அணியில் எவின் லூயிஸ், டேவிட் மில்லர், ஸ்ரேயாஸ் கோபால், ஆகியோருக்கு பதிலாக லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் மோரிஸ், அனுஜ் ராவத், ஜெய்தேவ் உனாட்கட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஈயான் மோர்கன் (கே), ஷாகிப் அல் ஹசன், தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், சிவம் மாவி, லோக்கி ஃபர்குசன், வருண் சக்கரவர்த்தி.
ராஜஸ்தான் ராயல்ஸ் - லியாம் லிவிங்ஸ்டன், யஷஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன் (கே), அனுஜ் ராவத், சிவம் துபே, கிளென் பிலிப்ஸ், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேத்தியா, சேத்தன் சகரியா, ஜெய்தேவ் உனாட்கட், முஸ்தாபிசூர் ரஹ்மான்.