ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் சென்னை, டெல்லி அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில் மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
அந்த வகையில் இன்று ஷார்ஜாவில் நடைபெறும் 46ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் லலித் யாதவிற்கு பதிலாக பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் மும்பை அணியில் ராகுல் சஹாருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, குர்னால் பாண்டியா, ஜெயந்த் யாதவ், நேதன் குல்ட்டர் நைல், டிரெண்ட் போல்ட், பும்ரா.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்டீவ் ஸ்மித், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மையர், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்ட்ஜே, ஆவேஷ் கான்.