ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், மீதமுள்ள 3 அணிகளில் யார் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இரு அணியிலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
ஆர்சிபி : விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், கேஎஸ் பரத், கிளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், ஜார்ஜ் கார்டன், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.
கேகேஆர்: வெங்கடேஷ் ஐயர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஈயான் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி ஃபர்குசன், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி.