ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் ஆர்சிபி அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்துள்ளார். அதேசமயம் ஆர்சிபி அணியில் சபாஷ் அஹ்மத், டேனியல் கிறிஸ்டியன், கைல் ஜேமிசன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - விராட் கோலி (கே), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், சபாஷ் அஹ்மத், டேனியல் கிறிஸ்டியன், கைல் ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
மும்பை இந்தியன்ஸ் - குயின்டன் டி காக், ரோஹித் சர்மா (கே), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.