ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 51ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திகின்றன.
இரு அணிகளுக்கு இது மிகவும் முக்கியமான போட்டி என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் டி காக், குர்னால் பாண்டியாவிற்கு பதிலாக ஜேம்ஸ் நீஷம், இஷான் கிஷான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் ராஸ்தான் அணியில் மார்கண்டேவிற்கு பதிலாக ஸ்ரேயாஸ் கோபால் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கே), ஷிவம் துபே, கிளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ஸ்ரேயாஸ் கோபால், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, கீரான் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.