ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இப்போட்டியில்டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் அமான் கானுக்குப் பதில் ஷிவம் மவி களமிறங்குகிறார்.
ராஜஸ்தான் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரசி வான்டர் டுசன், குல்தீப் சென் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோருக்குப் பதில் கருண் நாயர், ஒபெத் மெக்காய் மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்- ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(c), கருண் நாயர், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - வெங்கடேஷ் ஐயர், ஆரோன் பின்ச், ஷ்ரேயாஸ் ஐயர்(c), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், ஷெல்டன் ஜாக்சன், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி