ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 31ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இரு அணியிலும் எந்த வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்,
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே.எல். ராகுல் (கே), குயின்டன் டி காக், மனிஷ் பாண்டே, மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, குருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.