ஐபிஎல் 2022: டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியில் காயத்திலிருந்து மீண்டுள்ள வாஷிங்டன் சுந்தர் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்(கே), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன்
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா(கே), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், லாக்கி பெர்குசன், யாஷ் தயால், முகமது ஷமி
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News