ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 41ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ், சேத்தன் சகாரியா விளையாடுகிறார். அதேசமயம் கேகேஆர் அணியில் தமிழக வீரர் பாபா இந்திரஜித், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஆரோன் ஃபின்ச், சுனில் நரைன், ஸ்ரேயாஸ் ஐயர்(கே), நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், பாபா இந்திரஜித், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா.
டெல்லி கேபிடல்ஸ்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த்(கே), மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ரோவ்மன் பவல், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.