ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் அம்பத்தி ராயூடு சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ராஜஸ்தான் அணி ஷிம்ரன் ஹெட்மையர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கே), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஓபேட் மெக்காய்
சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, என் ஜெகதீசன், எம்எஸ் தோனி(கே), மிட்செல் சான்ட்னர், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், மதீஷா பத்திரனா, முகேஷ் சவுத்ரி