ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 69ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான மும்பை அணியில் ட்ரெவால் ப்ரீவிஸ், ஷோக்கீன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ப்ரிதிவி ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட்(கே), சர்பராஸ் கான், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன், டேனியல் சாம்ஸ், திலக் வர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், டிம் டேவிட், ரமன்தீப் சிங், ரித்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித், மயங்க் மார்கண்டே.