ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவுபெறுகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் 70 லீக் போட்டிகளும் முடிவடைந்து இன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் அல்ஸாரி ஜோசப்பிற்கு பதிலாக லோக்கி ஃபர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கே), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்.
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா(கே), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், லாக்கி பெர்குசன், யாஷ் தயால், முகமது ஷமி.