நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஆம்ஸ்டெல்வீனில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், ஷமர் ப்ரூக்ஸ், நக்ருமா பொன்னர், நிக்கோலஸ் பூரன்(கே), பிராண்டன் கிங், கீசி கார்டி, கைல் மேயர்ஸ், அல்ஸாரி ஜோசப், ஹேடன் வால்ஷ், அக்கேல் ஹோசைன், ஆண்டர்சன் பிலிப்.
நெதர்லாந்து : மேக்ஸ் ஓடோவ்ட், விக்ரம்ஜித் சிங், மூசா அகமது, ஸ்காட் எட்வர்ட்ஸ், பாஸ் டி லீட், பீட்டர் சீலர்(கே), தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், ஷாரிஸ் அகமது.