ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 23ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது.
மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ட்ரெண்ட் போல்டிற்கு பதிலாக ஜிம்மி நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் யாஷ் தையால், விஜய் சங்கர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ்: மேத்யூ வேட், ஷுப்மான் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா(கே), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், லோக்கி ஃபர்குசன், முகமது ஷமி, யாஷ் தயால்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷிம்ரோன் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஷ்வின், ரியான் பராக், ஜேம்ஸ் நீஷம், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.