ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.
இப்போட்டிக்கான ஹைதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஜெகதீஷா சுஜித் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் கேகேஆர் அணியில் ரஹானே, சாம் பில்லிங்ஸ், ராஷிக் சலாம் ஆகியோருக்கு ஆரோன் ஃபிஞ்ச்,ஷெல்டன் ஜாக்சன், ஆமான் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஆரோன் பின்ச், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கே), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெல்டன் ஜாக்சன், பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ், அமன் ஹக்கிம் கான், வருண் சக்கரவர்த்தி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கே), ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம், ஷஷாங்க் சிங், ஜெகதீஷா சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்