ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.
சென்னையிலுள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச முடிவுசெய்து, ராஜஸ்தான் ராயல்ஸை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் மிட்செல் சாண்டனர், டிவைன் பிரிட்டோரியர்ஸ் ஆகியோருக்கு பதிலாக மொயீன் அலி, மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிரெண்ட் போல்ட் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கே), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மையர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், குல்தீப் சென், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
சென்னை சூப்பர் கிங்ஸ்: டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி(கே), சிசண்டா மகலா, மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்.