ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் மல்லுகட்டி வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்து முன்னேறுவதற்காக இன்று சன்ரைசர்ஸ் ஹைதரபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
அதன்படி ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் சர்ஃப்ராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, ஹாரி புரூக், ஐடன் மார்க்ரம்(கே), மயங்க் அகர்வால், ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்
டெல்லி கேப்பிடல்ஸ்: டேவிட் வார்னர்(கே), பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், மனிஷ் பாண்டே, சர்பராஸ் கான், அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், ரிபால் பட்டேல், அன்ரிச் நார்ட்ஜே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா.