பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற, மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
இதையடுத்து நடைபெற்ற நான்காவது டி20 போட்டி ஏறத்தாழ முதல் இன்னிங்ஸ் முடிவடையும் தருவாயில் மழை காரணமாக ஆட்டம் பாதிலேயே தடைப்பட்டு, பின்னர் ரத்துசெய்யப்பட்டது. இதனால் டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ராவல்பிண்டியிலுள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் ஆசம்(கே), முகமது ஹாரிஸ், சைம் அயூப், ஷதாப் கான், இஃப்திகார் அகமது, இமாத் வாசிம், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், இஹ்சானுல்லா.
நியூசிலாந்து: டாம் லாதம்(கே), சாட் போவ்ஸ், வில் யங், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், ரச்சின் ரவீந்திரா, ஆடம் மில்னே, ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி, பிளேயர் டிக்னர்.