ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி மாலை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அதன்படி பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் : டேவிட் வார்னர் (கே), மிட்செல் மார்ஷ், யாஷ் துல், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.