ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக போராடி வருகின்றனர். இதில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் நிகழ்வு மழை காரணமாக சுமார் 45 நிமிடங்கள் தாமதமானது. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஜேசன் ராய், லிட்டன் தாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கே), மந்தீப் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், சுனில் நரைன், குல்வந்த் கெஜ்ரோலியா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர்(கே), பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.