ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ரஷித் கான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
அதேசமயம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் விளையாடாததால் ரஷித் கான் அணியை வழிநடத்துகிறார்.
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மன் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, அபினவ் மனோகர், ரஷித் கான்(கே), முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ்(டபிள்யூ), என் ஜெகதீசன், நிதிஷ் ராணா(கே), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், சுயாஷ் சர்மா, லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.