ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் ஐபிஎல் தொடரின் 1000ஆவது போட்டி இது என்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தேனி முதலில் பந்துவீச தீர்மானித்து மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அர்ஷத் கான், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.
சிஎஸ்கே: டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி(கே), ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர், சிசண்டா மகலா, துஷார் தேஷ்பாண்டே.