ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் இரு குழுக்காலாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் இத்தொடரின் இறுதிப்போட்டியில் மே 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக போட்டி பொதுவான இடத்தில் நடந்தது. அதாவது அணிகள் தங்களது உள்ளூர் மைதானங்களில் விளையாட முடியாத நிலைமை இருந்தது. தற்போது கரோனா கட்டுக்குள் வந்து விட்டதால் இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, நான்கு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு சாம்பியன் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
அதன்படி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா(கே), விஜய் சங்கர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோசுவா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கே), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.