ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதில் இரு அணிகளும் கடைசியாக விளையாட லீக் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால், எந்த அணி வெற்றிபெற்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மொஹாலியில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச தீரமானித்து பஞ்சாப் கிங்ஸை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான்(கே), மேத்யூ ஷார்ட், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, சாம் கரன், ஷாருக் கான், ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங்.
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கே), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோஷுவா லிட்டில்.