ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பல்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கேகேஆர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதேசமயம் ஹைதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அபிஷேக் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கே), அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், என் ஜெகதீசன், நிதிஷ் ராணா(கே), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், சுயாஷ் சர்மா, லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி.