16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தங்களுக்கான 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. இந்நிலையில் மீதமுள்ள இரு இடங்களுக்கான போட்டி நிலவி வருகிறது.
அந்தவகையில் இன்று நடைபெறும் 68ஆவது லீக் ஆட்டத்தில் நிதிஷ் ரானா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடுகிறது. இப்போட்டியில் லக்னோ அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கரண் சர்மா, பிரேரக் மன்கட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், குர்னால் பாண்டியா(கே), ஆயுஷ் படோனி, கிருஷ்ணப்ப கவுதம், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கே), ஆண்ட்ரே ரசல், ரின்கு சிங், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.