16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தங்களுக்கான 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. இந்நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு மூன்று அணிகளுக்கு இடையேயா கடும் போட்டி நிலவி வருகிறது.
அந்தவகையில் இன்று நடைபெறும் 69ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது. இப்போட்டியில் மும்பை அணி அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி மும்பை வான்கடேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: மயங்க் அகர்வால், விவ்ராந்த் சர்மா, ஐடன் மார்க்ரம்(கே), ஹென்ரிச் கிளாசென், ஹாரி புரூக், நிதிஷ் ரெட்டி, கிளென் பிலிப்ஸ், சன்விர் சிங், மயங்க் டாகர், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்.