ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
பெங்களூருவிலுள்ள எம். சின்னசுவாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவிச தீர்மானித்து ஆர்சிபி அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியிலிருந்து மைக்கேல் பிரேஸ்வெல் நீக்கப்பட்டு வெய்ன் பார்னெல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் லக்னோ அணியிலும் மார்க் வுட் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேட்ச்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (வ), அனுஜ் ராவத், டேவிட் வில்லி, வெய்ன் பார்னல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே.எல். ராகுல் (கே), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்னால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஜெய்தேவ் உனட்கட், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், மார்க் வூட், ரவி பிஷ்னோய்.