ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 42ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் அணியில் போல்ட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் மும்பை அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கே), தேவ்தத் பாடிக்கல், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித், அர்ஷத் கான்.