ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து லக்னோ அணியை பந்துவீச அழைத்துள்ள்ர். இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் மீண்டும் அணிக்குள் இடம்பிடித்துள்ளார்.
முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றிபெற்றதுள்ளதால், அத்தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆர்சிபி அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்சிபி : விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கே), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, கரண் சர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே.எல். ராகுல் (கே), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்ப கவுதம், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர்.