இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 52ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்து, ஹைதராபாத் அணியை பந்துவீச அழைத்துள்ளது.
இன்றைய போட்டிகான ராஜஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ஜோ ரூட் அறிமுகமாகிறார். அதேசமயம் ஹைதராபாத் அணியில் கிளென் பிலீப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கே), ஹென்ரிச் கிளாசென், கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், மார்கோ ஜான்சன், விவ்ராந்த் சர்மா, மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், டி நடராஜன்.
ராஜஸ்தான் ராயல்ஸ் : யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கே), ஜோ ரூட், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், முருகன் அஷ்வின், சந்தீப் சர்மா, குல்திப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.