இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் 16ஆவது சீசன் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 53ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிகான பஞ்சாப் அணியில் பனுகா ராஜபக்ஷா சேர்க்கப்பட்டுள்ளார். கேகேஆர் அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான்(கே), பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, சாம் கரன், ஷாருக் கான், ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
கேகேஆர்: ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கே), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி