ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் இன்று இரவு நடக்கும் 23வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் மோதின. அதில் குஜராத் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
அதன்படி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்து குஜராத் டைட்டன்ஸை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
மேலும் இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் அணியில் டிரெண்ட் போல்ட் சேர்க்கப்பட்டு, ஜேசன் ஹோல்டர் நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம் குஜராத் அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக அபினவ் மனோகர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கே), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, மோகித் சர்மா
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கே), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.